
“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார…