
கல்வியமைச்சின் இஸ்லாம் பாட ஆலோசகராக அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி)அவர்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களால் நியமனம்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக பொலனறுவை கதுருவெல முஸ்லிம் கொலனியைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்குடாவின் கல்வியலாளர்களில் ஒருவரான கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி)B.A.(Hons), PGDE, CTHE, M.A., M.Phil, PhD (Rd)அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தை இன்று (11.06.2025) கல்வியமைச்சில் இடம்பெற்று நிகழ்வின் போது பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.