Headlines

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கலை நிகழ்வு.

மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழாவும் பௌர்ணமி கலை நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது .

Read More

கல்குடா பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்..

கல்குடா பிரீமியர் லீக் பருவகால கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக ஆரம்பம் கல்குடா பிராந்தியத்தின் விளையாட்டுத்துறையில் மிக முக்கியமான நிகழ்வாகக்கருதப்படும் “கல்குடா பிரீமியர் லீக் – 2026” (KPL Season-09) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழா நேற்று 25.04.2026ம் திகதி சனிக்கிழமை மதியம் 1.00 மணிக்கு ஓட்டமாவடி அமீர் அலி பொதுமைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் (NSSC) தலைவர் ZM.றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

குச்சவெளி தவிசாளர் வேண்டுகோளை ஏற்று இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் .

தவிசாளர் முபாரக்கின் விசேட வேண்டுகோளில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம். குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகாலத்தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரத்தை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக தெற்காசிய பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப் உறுதியளித்துள்ளார். குச்சவெளி பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 17 ஆயிரம் மக்களின் சுகாதாரத்தேவைகளையும், குறிப்பாக சிறுநீரகக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் தூர இடங்களுக்குச் சென்று இரத்த சுத்திகரிப்பு (Dialysis) செய்து வருகின்ற மற்றும் செய்ய முடியாது தவிக்கும் நோயாளிகளின்…

Read More

மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்க நிதியுதவி .

மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு ​அரசாங்கத்தின் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் காசோலை வழங்கி வைக்கப்பட்டது. ​2006ஆம் ஆண்டு யுத்த சூழலினால் இடம்பெயர்ந்து, தங்களது வீடுகளை முழுமையாக இழந்த 38 பயனாளர்கள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ​ஒவ்வொரு வீடும், தலா 20 லட்சம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, முதற்கட்டமாக…

Read More

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம். (பாறுக் ஷிஹான்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026ம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது, கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு சமூகப்பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன்,…

Read More

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் அங்கத்தவர்கள் துருக்கி பயணம்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அங்கத்தவர்கள் ஒரு வார கால ஊடகப் பயிற்சி நெறிக்காக துருக்கி பயணம்.. துருக்கியின் அங்காராவில் ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள ‘இலங்கை புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சித் திட்டத்தில்’ (Sri Lankan New Generation Journalism Training Program) பங்கேற்பதற்காக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) 10 உறுப்பினர்களைக் கொண்ட ஊடகவியலாளர் குழு ஞாயிற்றுக்கிழமை  (19)அதிகாலை துருக்கி நோக்கிப் புறப்பட்டது. துருக்கிய ஒத்துழைப்பு…

Read More

நாளை முதல் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளை தொடரவுள்ளன.

நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு. அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகிறது. முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. புத்தாண்டு விடுமுறையின்…

Read More

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வெள்ளி விழா.

வெள்ளி விழா கொண்டாடும் சமுர்த்தி வங்கி (பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25ம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக்கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) வங்கியில் இடம்பெற்றது. வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு நினைவுக் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், வாடிக்கையாளர்களினால் சேமிப்பு வைப்புக்களும் வைக்கப்பட்டன. வங்கியின் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களினால் நேற்றைய தினம் ரூபா 3-5 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டது. சாய்ந்தமருது…

Read More

ஏறாவூர் பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஏறாவூர் பொதுச் சந்தை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.. ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், ஏறாவூர் பொதுச் சந்தை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை  (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. ஏறாவூர் நகரசபை தவிசாளர்  எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அதேவேளை, கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா…

Read More

ஊடக அறிக்கையிடல் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் .

அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பில் கலந்துரையாடல். (எம்.ஐ.அப்துல் நஸாா்) காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பிலான விசேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 8 மணிக்கு அல் பஜர் பள்ளிவாயலில் நடைபெற்றது. காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம்.நூா்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் வளவாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம். பைறூஸ் கலந்து கொண்டு விாிவுரையினை நிகழ்த்தினாா். காத்தான்குடியினை தளமாகக்…

Read More
Back To Top