ஏறாவூரில் அதிகாலை நேரம் விபத்து.

ஏறாவூரில் இன்று அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் .மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் . மேலதிக விபரம் ….. ஏறாவூரில் இன்று அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. பண்டாரகமுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்தே காரே தூக்க களைப்பினால் கட்டுப்பாட்டை இழந்து ஹாட்வெயார் கடைக்குள் புகுந்துள்ளது. உயிர் சேதம் மற்றும் படுகாயம் எதுவும் இடம்பெறவில்லை.எனினும் கடைக்குள்…

Read More

இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு .

ஓட்டமாவடியில் இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு விழா. எஸ்.எம்.எம்.முர்ஷித் இளைஞர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் பயிற்சி நிலையம் ஓட்டமாவடியில் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இளைஞர் சேவைகள் அதிகாரியும் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சி.தர்ஸன…

Read More

ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு.

ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

Read More

வாழைச்சேனையில் கார்த்திகை தீபநாள்.

வாழைச்சேனை கார்த்திகை தீபநாள். (எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்று (சனிக்கிழமை) கார்த்திகை தீப நாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம். 2024 ம் ஆண்டின் கார்த்திக தீபம் ஏற்றும் நிகழ்வு வாழைச்சேனை கலை வாணி கலைமன்ற தலைவர் சு.டிலக்சன் தலைமையில் வாழைச்சேனை இந்து மையானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுகனக்கான மக்கள் பங்கேற்றதுடன் கல்லறையில் உறங்கிகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அவர்களின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் கலைவானி…

Read More

மல்வத்தையில்  தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின்  சடலம்  மீட்பு.

மல்வத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தையை சேர்ந்த குலசேகரன் ரவி (வயது 62) என்பவரே மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

வீதி விழிப்புணர்வு நாடகம்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு “மெய்யான கிறிஸ்மசும் மது இல்லாத சமுதாயம்” எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை போதகர் k.தங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.

Read More

ஓட்டமாவடி கிட்ஸ் அகடெமியில் விதைப்பந்து பயிற்சிப்பட்டறை.

ஓட்டமாவடி கிட்ஸ் அகடெமியில் விதைப்பந்து பயிற்சிப்பட்டறை. எஸ்.எம்.எம்.முர்ஷித். சூழலியல் நேயமிக்க எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் நோக்கில் விதைப்பந்து எண்ணக்கருக்களை இவ்வருடம் ஹப்பி எய்ட் சிறார்கள் மத்தியில் விதைக்கிறது. வீட்டில் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் விதைகளை 5R முறையில் மீளப்பயன்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் விதைகளை சேகரித்து விதை பந்துகளாக்கி அழிந்த காட்டு பகுதிகளை மீள காடாக்கலாம் எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் விதைப்பந்து பயிற்சிப்பட்டறையும் இன்று (13) எல்லை வீதி, ஓட்டமாவடி-3ல் அமைந்துள்ள ஓட்டமாவடி கிட்ஸ் குர்ஆன் அகடெமியில் இடம்பெற்றது. இதில்…

Read More

ஏறாவூர் அல் அமான் வித்தியாலய வரலாற்று விழா.

வரலாற்று நிகழ்வில் தடம் பதித்தது ஏறாவூர் அல் அமான் வித்தியாலயம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆங்கில மொழி விழா நேற்று புதன்கிழமை (11) ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம். அமீர் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஆங்கில மொழியை ஊக்குவித்து அதனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்வி பணிப்பாளர் டீ.எம். செய்த் அஹமட் கலந்து கொண்டிருந்தார்….

Read More

ஊடக செயலமர்வு

அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஊடக செயலமர்வு சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் கண்டி தெநுவர வலயத்திற்குட்பட்ட தெகியங்க அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) ஊடகப்பிரிவு மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு நேற்று(11) கல்லூரி பிரதான மண்டபத்தில், ஆர்.ஜே.மீடியாவலையமைப்பின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சப்னா அவர்களின் ஏற்பாட்டில், கல்லூரியின் அதிபர் எம்.மன்சூர் மபாஹிர் அவர்களின் அனுமதியுடன் பிரதி அதிபர் உஸ்மான் லெப்பை மொஹமட் ரிஸான் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஊடகத்துறையின் அவசியம்…

Read More
Back To Top