கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையேற்ற அஸ்மி. கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி தனது கடமையை பொறுப்பேற்றார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்றையதினம் (17) நியமிக்கப்பட்டு விவசாய அமைச்சின் கடமைகளை உடன் செயற்படும் வண்ணம் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி,…

Read More

திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

நிலாவெளியில் இடம்பெற்ற விபத்தில்மாணிக்கநடராசா மரணம். திருகோணமலை -நிலாவெளி பகுதியில் இன்று (18) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த திரியாயைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கநடராசா அகால மரணமடைந்துள்ளதுடன் அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மாகாண மட்டத்திற்கு தெரிவாகினர்.

ரிதிதென்ன இக்ரஃவிலிருந்து மாகாண மட்டம் செல்லும் இரு மாணவிகள். வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் 16 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலய மாணவிகளான எம்.எஃப்.மன்ஸிலா முதலாமிடத்தையும் ஏ.எஃப்.அஸ்னா இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறித்த மாணவிகளுக்கும் மாணவிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களான ஆர்.ஏ.எம்.பாஷித், ஏ.எல்.எம்.றிஸ்வாஹிதீன், மாணவிகளை போட்டி நடைபெற்ற ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்ற ஆசிரியர் ஏ.எஃப்.றிபாஸ் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்.

Read More

ஏறாவூர் நகரசபையில் பதவியேற்பு.

ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர், கௌரவ பிரதி தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் (18) புதன்கிழமை இன்று பதவியேற்றார்கள். ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், கௌரவ பிரதி தவிசாளர் ஞானசேகரம் கஜேந்திரன், ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான கௌரவ ஏ.எம் அஸ்மி, கௌரவ ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், கௌரவ எஸ்.எம் ஜப்பார், கௌரவ எம்.ஐ.ஏ நாஸர், கௌரவ சுப்பிரமணியம் ரகுபரன், கௌரவ அசனார் சுபைதா உம்மா, ஆகியோர் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம்…

Read More

பாசிக்குடா கடற்கரையில் பொலிசாரின் ஏற்பாட்டில் சிரமதானம்.

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸாரினால் சிரமதானம் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஹான் திலங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்குடா சுற்றுலா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்திரபால தலைமையில் கல்குடா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஏ.றஹீமின் (SI) பங்குபற்றுதலோடு இன்று (18) காலை மணி முதல் பாசிக்குடா கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. இச்சிரமதானப்பணியில் சுகாதாரப்பரிசோதகர் எம்.ஜெளபர், கல்மடு, கல்குடா, கும்புறுமூலை, பேத்தாளை கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்…

Read More

விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு.

எரிபொருள் பௌசர், முச்சக்கர வண்டி மோதி விபத்து; வைத்தியர் உயிரிழப்பு! சேருவில – தங்கநகர் பகுதியில் சம்பவம். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் எரிபொருள் பௌசருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சேருவில பகுதியில் இருந்து தோப்பூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன்…

Read More

சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் .

சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் மட்டக்களப்பு ஏறாவூர் பெண் பாடசாலை வீதியை சேர்ந்த அப்துல் வாஹிட் இர்சாத் அலி மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் மாவட்ட நீதிவான் எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் பக்கீர் முகைதீன் அப்துல் வாஹிட், நாகூர் ஹாஜி சித்தி அப்பாசியா தம்பதிகளின் புதல்வர் ஆவார். மட்/மம/அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்கல்வியையும் கற்ற இவர் மட்/மம/ஏறாவூர் அலிகார்…

Read More

ஓட்டமாவாடி பிரதேச சபை SLMC வசமானது.

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அணி கைப்பற்றிக் கொண்டது. இதன் தொடரில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய உள்ளூராட்சி மன்றங்களைத் தம்வசப்படுத்திக் கொண்டது. அதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக முஹம்மது பைறூஸ் மற்றும் உதவித்தவிசாளராக ஏ.எச்.நுபைல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் (06), தமிழ்ரசுக்கட்சி (01), சுயேட்சைக்குழு (01)…

Read More

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடையில் தீ பரவல்.

பொதுமக்கள் அவதானம்! முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைகள் தீ பரவல் முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன. மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவும் பலத்த காற்று வீசுகின்றது. காற்றின் வேகத்தினால் தீபரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசக்கூடும் மிக மிக மக்கள் அவதானமாக இருக்கவும். முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு…

Read More
Back To Top