இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்டோருக்கு ஜனாதிபதியினால்  நியமனங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று இருந்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தி, ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாக இ.போ.சபையை கட்டியெழுப்புவதற்கு இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்ததுடன், புதிய நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது…

Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அதிகரிப்பு. 12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990 5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602 2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750 ரூபாய் ஆகும்.

Read More

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு.

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அருனாளினி ஏற்பாட்டில்பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) அன்று இடம்பெற்றது. ” பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தில் பெருமை” எனும் தொனிப்பொருளில்நாடளாவிய ரீதியில் மகளீர் தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண்…

Read More

வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் இப்தார் நிகழ்வு.

வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் இப்தார் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு. வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேலும் 08 பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இன்று (08) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. குறித்த நம்பிக்கையாளர் சபையின் உபத் தலைவர் அல்ஹாஜ் ஏ. ஐயூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ்…

Read More

போதை ஒழிப்பு மற்றும் இப்தார் நிகழ்வு.

போதை ஒழிப்பு மற்றும் இப்தார் நிகழ்வானது லெப்டினன் கேனல் DM. அனஸ் அஹமட் தலைமையில்  திங்கள்கிழமை(09)அன்று ஏறாவூரில் அமையப்பெற்றுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரதீப் கலுபான கலந்து சிறப்பித்தார். ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ,ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ,நகரசபையின் உறுப்பினர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் ,அதிபர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள்,ஆசிரியர்கள் ,அரச உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் ,சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் மேற்படி நிகழ்வில் பங்கேற்று…

Read More

Youth link sri lanka திட்டத்திற்கு இளைஞர் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் பங்கேற்பு.

Youth Link Sri Lanka திட்டத்திற்கு இளைஞர் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் பங்கேற்பு. Youth Link Sri Lanka திட்டத்திற்கு இளைஞர் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் பங்கேற்புமட்டக்களப்பு மாவட்டத்தின் Youth Link Sri Lanka திட்டத்தின் இரண்டாம் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அண்மையில் (07) இளைஞர் விவகார விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திணிந்து சமன ஹென்நாயக்க கலந்து கொண்டார்.மட்டக்காப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று, தெற்கு மண்முனை, எருவில் பற்று, ஆகிய பிரதேசங்களிலும் அனுராதபுரம்,…

Read More

T20 வெற்றிக்கிண்ணம் இந்தியா வசமானது.

T20 உலக கிண்ணத்தை மூன்றாவது தடவையாகவும் கைப்பற்றியது இந்தியா. நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா 03ஆவது முறையாகவும் T20 உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட நியூசிலாந்து அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி…

Read More

ஜனாதிபதியுடன் தேரர்கள் சந்திப்பு.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர் மற்றும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய வண, மாபலகம புத்தசிறி தேரரும் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். இதன்போது வருகை தந்த தேரர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாடலில் ஈடுபட்டார்….

Read More

2026ம் ஆண்டிற்கான அறிவுச் சுரங்கம் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை முதலிடம் .

2026 அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி! ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடத்திவரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை ஆறாவது வருடமாக கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிரேஷ்ட அறிவிப்பாளர் எம்.ஐ. ஷிஹாமுதீன் நடத்திய, தயாரிப்பாளர் முஹம்மத் றலீன் தயாரித்து வழங்கிய அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மார்ச் 07ஆம் திகதி சனிக்கிழமை…

Read More

காத்தான்குடியில் ரட்டம எகட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரம்.

காத்தான்குடியில் ரட்டம எகட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரம் “ரட்டம எகட்ட” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒன்றிணைந்து காத்தான்குடி பகுதியில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று   வெள்ளிக்கிழமை(06)அன்று முன்னெடுக்கப்பட்டது. ​விஷ போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு அளித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது….

Read More
Back To Top