புதிய அரசாங்க அதிபரைச் சந்தித்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்.
(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கடமையேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கடந்த வியாழக்கிழமை (12) நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இச்சந்திப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், நிர்வாக ஒழுங்குகள் மற்றும் மக்கள் நலத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இணைந்து செயற்பட வேண்டிய தேவையும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச்செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னாவும் கலந்து கொண்டிருந்தார்.

