இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் T20 வெற்றிக்கிண்ணம் தொடர்பாக கருத்து தெரிவிப்பு.

இந்திய அணியின் 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிகள் 50 ஓவர் உலகக் கோப்பைப் வெற்றிகளுக்கு  ஈடாகாது” என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி  தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும், 

சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும் பெருமை பெற்றுள்ளது .

இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றிருந்தது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று பட்டங்களை வென்ற ஒரே அணியாக இந்தியா திகழ்கிறது. இந்திய அணி 1983ல் கபில் தேவ் தலைமையிலும், 2011ல் எம்.எஸ். தோனி தலைமையிலும் இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகளைப் பெற்றுள்ளன.

2026 T20 உலகக் கோப்பை வெற்றியின் இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஐசிசி சாதனைகள் குறித்து தனது எக்ஸ் கணக்கில் மஞரேக்கர் பதிவிட்டார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த உலகப் பட்டங்களை காலப்போக்கில் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சவால் மற்றும் அதன் புனிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிகள் 1983 கபில்தேவ் தலைமையிலான ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2011 தோனி தலைமையிலான ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளுக்கு நெருக்கமாகக்கூட வரவில்லை” என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top