இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்டோருக்கு ஜனாதிபதியினால்  நியமனங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று இருந்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தி, ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாக இ.போ.சபையை கட்டியெழுப்புவதற்கு இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்ததுடன், புதிய நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் ஜனாதிபதி தெரிவித்தார் .

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் தற்போது போக்குவரத்துக்கான தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருகிறது. அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான தரத்துடனான புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும் பழைய பஸ்களை படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து ஒதுக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்தார்

இது ஒரே தடவையில் செய்ய முடியா விடயம் என்றாலும், சில வருடங்கள் திட்டமிட்ட முறையில் செயற்படுவதன் மூலம் தரமான போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால் முடியும் என்பதையும் இங்கு ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .

செய்தி மூலம்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top