
அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையால் கிடைத்த வெற்றி
- வாழ்த்தில் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.பாஹிர்
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப்பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.பாஹிர் தெரிவித்துள்ளார்.
உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையின் பலனாக இவ்வெற்றியை அடைந்துள்ளீர்கள். அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல், குறிப்பாக, பெற்றோர்களின் அளப்பெறிய தியாகம் உங்கள் வெற்றிக்கு உரமாகும்.
நீங்கள் காட்டிய முயற்சி மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகவுள்ளது. இவ்சாதனை உங்கள் பயணத்தின் முடிவல்ல. இன்னும் பல உயரங்களை அடைய இது ஒரு அழகான தொடக்கம்.
அல்லாஹ் உங்களுக்கு மேலும் பல வெற்றிகளையும், நன்மைகளையும் அருள்வானாக! உங்கள் சாதனைகள் சமூகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
அதேவேளை, எதிர்பார்த்த பெறுபேறுகளைப்பெற முடியாத மாணவர்களே!
வெற்றி உடைந்து கிடைக்காததால் மனம் உடைந்து போக வேண்டாம். வாழ்க்கை என்பது ஒரே முயற்சியில் முடிவடையும் பயணமல்ல. பல தடைகள், சோதனைகள், தாமதங்கள் வந்தாலும் அவை நம்மை வலுவாக்கும் அனுபவங்களே. நீங்கள் இப்போது அடையாத வெற்றி, நாளை உங்களுக்கான பெரிய சாதனையாக மாறலாம்.
முயற்சியை நிறுத்தாதவர்களுக்கு அல்லாஹ் ஒருநாள் சிறந்த பலனை வழங்குவான். நம்பிக்கை இழக்காதீர்கள்! பொறுமையோடு உங்கள் முயற்சியை தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் உங்கள் நேரம் வரும்.
“முயற்சி செய்பவர்களுக்கு தோல்வி இல்லை, அவர்கள் வெற்றி பெறுவதற்கான பாதையை கற்றுக்கொள்கிறார்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
