ஊடகத்துறையில் உண்மை நேர்மைக்கு நல்லதோர் அடையாளம் மர்ஹும் சலீம்.

ஊடகத்துறையில் உண்மை, நேர்மை, பொறுப்புணர்வின் அடையாளம் ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் – அனுதாபச்செய்தியில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவுச்செய்தி துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

எனது நீண்டகால நண்பராக இருந்த அவர், ஊடகத்துறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, உண்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் அடையாளமாகத் திகழ்ந்தார்.

1966ம் ஆண்டிலிருந்து வீரகேசரி நாளிதழின் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றியதுடன், தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் தனது பணிப்பாதையைச் செழுமைப்படுத்தி, சமூகத்தின் உண்மைக்குரலாக உயர்ந்தார்.

அவரது நேர்மையும் தொழில்முறை ஒழுக்கமும் என்னை எப்போதும் கவர்ந்துள்ளது. ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும், சமூக நலன்களுக்கும் அவர் செய்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top