

ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
“Small Entrepreneur Idea Workshop”
கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியான்மை பிரிவின் ஏற்பாட்டில் “Small Entrepreneur Idea Workshop” ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று 27.05.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு இடம்பெற்றது.
நிலையப்பொறுப்பாதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேற்பார்வை உத்தியோகத்தரும் வியாபார பயிற்றுவிப்பாளருமாகிய டி.நிலோசன் கலந்து கொண்டு தொழில் முயற்சி மற்றும் முயற்சியான்மை பற்றி விரிவுரையாற்றினார்.
இதில் கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.சுஹைர், எம்.பீ.யூ.ஹபீபா (DO-EDB), எச்.யூ.ஹப்ஸா (DO-NEDA), எம்.எஸ்.ஷிபானா (DO-SED) ஆகியாரும் ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதான மொழிபெயர்ப்பாளர் பி.புஸ்பராஜா, முகாமைத்துவ உதவியாளர் பி.சாந்தி புஸ்பராஜா (MSO-01), ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தின் கணணி இயக்குனர் எம்.என்.எம்.நஸீஹ் (BA), என்.எம்.இஹ்ஸான் (OES) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தகவல்,
MNM.நஸீஹ் (BA)
இளைஞர் தொழிற்பயிற்சி நிலையம்
ஓட்டமாவடி.