
மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் பரீட்சைப்பெறுபேறுகள் – வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன்
மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரமாக இப்பரீட்சைப்பெறுபேறுகள் அமைந்துள்ளதாக நேற்றைய தினம் (31) வெளியிடப்பட்ட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் குறிப்பிட்டுள்ளார்.
இப்பெறுபேறுகள் வெறும் மதிப்பெண்களல்ல. அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட உழைப்பு, தியாகம் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் ஒருங்கிணைந்த பலனாகும் என தனது வாழ்த்தில் மாணவர்களின் சாதனைகள் பெருமையுடன் பாராட்டியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கும் இம்மாணவர்களின் இவ்வெற்றி, அவர்களது குடும்பங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமன்றி, முழு சமூகத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும். இந்த ஆரம்ப வெற்றி, எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த இலக்குகளை அடைய வலுவான அடித்தளமாக அமையும்.
அதேவேளை, எதிர்பார்த்த பெறுபேறுகளைப்பெற முடியாத மாணவர்களும் இதனை கற்றலின் முடிவல்ல. ஒரு புதிய தொடக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும். இன்றைய சவால்கள் நாளைய வெற்றிகளுக்கான படிக்கட்டுகளாக மாறும். தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்யும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி காண்பார்கள்.
மேலும், உயர்கல்வியைத்தொடர விரும்பும் திறமையான மாணவர்களில் பொருளாதார வசதியற்றவர்கள் இருப்பின், அவர்கள் தயக்கமின்றி தம்மை தொடர்பு கொண்டால் என்றும் உதவ நாம் தயாராகவே உள்ளோம்.
அத்தகைய மாணவர்களின் உயர்கல்வி பயணம் இடையூறின்றி தொடரத்தேவையான பொருளாதார உதவிகளை தானும், தனது நண்பர்கள் வட்டத்தினரும் இணைந்து வழங்கத்தயாராக இருக்கின்றோம். திறமைமிக்க மாணவர்கள் வாய்ப்பின்மையால் பின்தங்கக்கூடாது என்பதே தமது நிலைப்பாடாகும்.
மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் அமைதியாக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் அர்ப்பணிப்பும் வழிகாட்டுதலும் தான் இவ்வளவு சிறந்த பெறுபேறுகளுக்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் வாழ்த்துகளைக்கூறி, அனைத்து மாணவர்களதும் எதிர்காலப்பயணம் அறிவு, ஒழுக்கம் மற்றும் சாதனைகளால் நிறைந்ததாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
கல்வி வளர்ச்சி தான் எனது பிரதேசத்தின் முன்னேற்றமாக எதிர்கால மீள்ச்சியாக அமையும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையில் அதனை வலுப்படுத்த தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அது மென்மேலும் தொடரும் என தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
