

உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் காத்தான்குடி, மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்று வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் எம்.எஸ்.எம். பர்தான் தேசிய ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் மாவட்ட ரீதியில் பொறியியல் தொழிநுட்பத்துறையில்
எம்.ஜே. அத்ஹம் முதலாம் இடம் பெற்றதுடன், கலைத் துறையில் எம்.எல்.எம். ஆதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
