தேசிய  ஷோடோகான் கராத்தே போட்டியில் நிந்தவூர் அணி வெற்றி.

தேசிய ஷோடோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற Team Bruce (SKMS) வீரர்கள்

கடந்த 04.04.2026ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற “15வது Shotokan Karate National Championship 2025” போட்டியில் நிந்தவூர் Team Bruce மாணவர்கள் சாதனை படைத்து 4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இத்தேசியளவிலான போட்டியில் SKMS அமைப்பின் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.

இது ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் தன்னம்பிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

மேலும், சிறந்த பயிற்சிகளை வழங்கிய பிரதம போதனாசிரியர் சிஹான் எம்.எஸ்.வஹாப்தீன், ஆலோசனை வழங்கிய கழகச்செயலாளர் சென்செய் என்.சதாம் மற்றும் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து கராத்தே மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top