

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதியொதுக்கீட்டில் ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்ததோடு, ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், ஆலயடிவேம்பு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஆர்.ரதீசன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலயடிவேம்பு பிரதேச பிரஜா சக்தி தவிசாளர்கள் உட்பட பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
