

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இப்புதிய நிலைமைகளை எதிர்கொள்ளும் போது, டிஜிட்டல் குறியீட்டு முறை (QR), வீட்டிலிருந்து பணியாற்றுதல் (Work from Home) போன்ற மாற்று வழிமுறைகளை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதையும், அதேபோல் உருவாகி வரும் புதிய நிலைமைகள் குறித்து மக்களுக்குத் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்தும் முறையான தகவல் தொடர்பு முறையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
-செய்தி மூலம்
ஜனாதிபதி ஊடகப்பிரிவு.
