


ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் மாற்றித்திறனாளி மாணவர்களில்ளுக்கு நிதியுதவி.
சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினூடாக மாற்றுத்திறனாளிகளுக்கான செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளியான பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் நோக்கில் கல்விக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று 30.03.2026ம் திகதி திங்கட்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறுக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் சிறாஜி, சமூர்த்தி தலைமையக முகாமையாளர் என்.ஐ.ஏ.அஸீஸ், கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, மொழிபெயர்ப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.முஸ்தபா இஸ்லாஹி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது முப்பதாயிரம் ரூபா வீதம் ஒன்பது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
