மீண்டும் வரலாற்றுச்சாதனை படைத்த
நிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய 2026ம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட கபடிப்போட்டிகள் கம்பளை வெலம்பொட எக்ஸிலியன் உட்புற விளையாட்டரங்கத்தில் கடந்த 07, 08, 09ம் திகதிகளில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 14, 16, 18 ஆகிய வயதுப்பிரிவு கபடி அணிகள் பங்கு கொண்டு மூன்று அணிகளுமே வெற்றிவாகைசூடி பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.
இதில் 18 வயதுக்குட்பட்ட அணியினர் தங்கப்பதக்கத்தைப் பெற்றதோடு, 14 வயதுக்குட்பட்ட அணியினர் வெள்ளிப்பதக்கத்தையும் 16 வயதுக்குட்பட்ட அணியினர் வெண்கலப்பதக்கத்தையும் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்துவதோடு, இதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கிய கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர் மற்றும் இக்கபடி அணிகளை பயிற்றுவித்து அழைத்துச்சென்று வெற்றிவாகை சூடுவதற்கு வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியரும் தேசிய கபடி பயிற்றுவிப்பாளரும் கபடி நடுவருமான எஸ்.முஹம்மட் இஸ்மத் ஆசிரியர் மற்றும் பாடசாலை முன்னாள் கபடி வீரர் கே.எம்.நப்ரீஸ் ஆகியோருடன் இவர்களுடன் இணைந்து வீரர்களைப் பயிற்றுவித்த பாடசாலையின் சிரேஷ்ட கபடி வீரர்கள், மதீனா விளையாட்டுக்கழகத்தின் சிரேஷ்ட கபடி வீரர்கள் ஆகியோர்களுக்கும் பாடசாலை கபடி பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அஸ்மி மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கும் அஷ்றக்கியன் சமூகம் மகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.


