சுற்றுலாத் துறை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு  அடையாள அட்டை வழங்கி வைப்பு .

Techlink Technology campus

மற்றும்

Eastern Tour hub

(கிழக்கின் சுற்றுலா மையம்)ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து Eastern Tour hub சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி திட்டத்தினை பூர்த்தி செய்த இளைஞர்யுவதிகளுக்கு ETH உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழிற்தகைமைகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, ITL செயற்த்திட்டத்தின் மூலமாக வாழ்வாதாரம் சமுர்த்தி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்
மற்றும் முதல் 10 தொழில் முனைவோர்களுக்கு விருதுவழங்குவதற்கான நேர்முகத் தேர்வு நேற்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்திருக்கும் ETH காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ETH அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜூன் தலைமை தாங்கியதுடன் ETH அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.எம். ஜஹான் நிதா ஹோலிங் டூர் அமைப்பின் பணிப்பாளர் முஹம்மது சப்னிஸ் மற்றும் ETH அமைப்பின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்களிப்பு வழங்கினார்கள்.

இலங்கையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற பரந்த அளவிலான நோக்கங்களை கொண்டதாக Techlink Technology campus மற்றும் ETH நிறுவனத்தின் நோக்கமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top