


சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு, அதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களது தலைமையிலான இந்தப் பாராளுமன்ற தூதுக் குழு, 2026 மே 26 முதல் ஜூன் 04 வரை சீனாவின் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றது.
இந்த விஜயத்தின் போது, இக்குழு சீனாவின் ஆளுகைக் கட்டமைப்பு, அபிவிருத்தி மூலோபாயம், சனநாயக ஆலோசனைப் பொறிமுறைகள் மற்றும் தேசியக் கொள்கை வழிகாட்டல் முதலிய தலைப்புகளில் சீனாவின் சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரினால் நடத்தப்பட்ட அமர்வுகளில் பங்கேற்றது.
