தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய வலைகள் வழங்கி வைப்பு.

தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு புதிய வலைகள் வழங்கும் முதற்கட்ட நிகழ்ச்சி (02) ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன அதிதியாக கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார்.

தித்வா வெள்ளப் பெருக்கின் காரணமாக மீன்பிடி உபகரணங்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 75 மீனவர்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் முதற்கட்டமாக 40 மீனவர்களுக்கு செவ்வாய்கிழமை அன்று புதிய வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, எஞ்சியுள்ள 35 மீனவர்களுக்கும் அவர்களின் சேதமடைந்த வலைகளுக்குப் பதிலாக புதிய வலைகளை வழங்குவதற்கான இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், தித்வா பேரிடரின் போது தமது மீன்பிடிப் படகுகளை முற்றிலுமாக இழந்த மீனவர்களுக்கு புதிய படகுகளை பெற்றுக்கொடுக்கும் திட்டமும் தற்போது தயாரிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர், மாவட்டத்தின் பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top