மட்டு செங்கலடி பகுதியில்  யானைகளின்  அட்டகாசத்தால் பொருட்கள் சேதம்.

செங்கலடி பதுளை வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் வர்த்தக நிலையம் உட்பட பயிர் நிலங்களும் மதில்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.இச்சம்பவத்தினால் அதிகளவான பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன. யானை அச்சுறுத்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் வேளை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவாக தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் இதன்போது கோரிக்கை விடுக்கின்றனர்.

Read More

ஏறாவூர் வாவிக்கரை பூங்காவில் முதியோர் ஓய்வுக்கான கூடாரம் திறந்து வைப்பு.

முதியோர்களுக்கான ஓய்வு வசதிகள் மேம்பாடு – மௌலானா பூங்காவில் கூடாரம் — தவிசாளர் நழீம் அவர்களினால் திறந்து வைப்பு ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள மௌலானா பூங்காவில், தினமும் மாலை நேரங்களில் முதியோர்கள் ஒன்றுகூடி தங்களது ஓய்வு நேரங்களை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள், நகரசபைக்கு சொந்தமான இப்பூங்காவை பார்வையிட வந்தபோது, அங்கு கூடிவந்த முதியோர்களினால் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் குறைபாடுகள்…

Read More

சம்மாந்துறை அல்/அர்சத் மகா வித்தியாலயத்திற்கு மின்குமிழ்கள் வழங்கி வைப்பு.

சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு நவீன மின்விளக்கு தொகுதிகள் வழங்கல் (நூருல் ஹுதா உமர்) பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் சம்மாந்துறை கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள் இன்று (02) வழங்கப்பட்டன. இத்தொகுதிகளை சம்மாந்துறை “வன் என் வன்” டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். யானை தாக்குதலில் இருந்து…

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப் பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களின் கடின உழைப்பின் பலன், அதனுடன் இணைந்து பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பு, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரிய வழிகாட்டல், குறிப்பாக பெற்றோர்களின் அளவற்ற தியாகம் மற்றும் ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெற்றியை பெருமையுடன் நினைவுகூர்கிறேன். கல்வியின் மூலம் அறிவார்ந்த மற்றும் வலுவான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற…

Read More

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு.

உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் காத்தான்குடி, மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நேற்று வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் எம்.எஸ்.எம். பர்தான்  தேசிய ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் மாவட்ட ரீதியில் பொறியியல் தொழிநுட்பத்துறையில்எம்.ஜே. அத்ஹம் முதலாம் இடம் பெற்றதுடன், கலைத் துறையில் எம்.எல்.எம். ஆதில் மட்டக்களப்பு…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் வாழ்த்து செய்தி.

மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் பரீட்சைப்பெறுபேறுகள் – வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரமாக இப்பரீட்சைப்பெறுபேறுகள் அமைந்துள்ளதாக நேற்றைய தினம் (31) வெளியிடப்பட்ட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் குறிப்பிட்டுள்ளார். இப்பெறுபேறுகள் வெறும் மதிப்பெண்களல்ல. அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட உழைப்பு, தியாகம் மற்றும்…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான வாழ்த்து செய்தி.

அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையால் கிடைத்த வெற்றி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப்பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.பாஹிர் தெரிவித்துள்ளார். உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையின் பலனாக இவ்வெற்றியை அடைந்துள்ளீர்கள். அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல், குறிப்பாக, பெற்றோர்களின் அளப்பெறிய தியாகம் உங்கள் வெற்றிக்கு உரமாகும். நீங்கள் காட்டிய முயற்சி மற்றவர்களுக்கு ஒரு…

Read More

தேசிய ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் .

இன்றைய தினம்  வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை (2025) முடிவுகளின் படி காத்தான்குடியை சேர்ந்த மாணவர் முகம்மட் சுபைத்தீன் பர்தான் அவர்கள் வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவன் காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்றே இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

Read More

2025ம் ஆண்டுக்கான A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு .

2025 A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியானது 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செவ்வாய்கிழமை (31) வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஏறாவூர் பசீர் சேகுதாவூத் பாடசாலைக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு அலுவலக பொருட்கள் வழங்கி வைப்பு. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி அலுவலக பாவனை பொருட்களும் வகுப்பறைக்கான வெண்பலகையும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான SL.முனாப்தீனால் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை அதிபர் SAC.அஜ்மல்கானிடம் கையளிக்கப்பட்டது. பொருட்கள் கையளிப்பு நிகழ்வில் ஒய்வுநிலை ஆசிரியர் ALM.றபீக் மற்றும் ஆசிரியர் N.நசீர் அஹமட் உட்பட மாணவர்கள் என பலர் மேற்படி நிகழ்வில்…

Read More
Back To Top