முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப் பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களின் கடின உழைப்பின் பலன், அதனுடன் இணைந்து பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பு, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரிய வழிகாட்டல், குறிப்பாக பெற்றோர்களின் அளவற்ற தியாகம் மற்றும் ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெற்றியை பெருமையுடன் நினைவுகூர்கிறேன். கல்வியின் மூலம் அறிவார்ந்த மற்றும் வலுவான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற…

Read More

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு.

உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் காத்தான்குடி, மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நேற்று வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் எம்.எஸ்.எம். பர்தான்  தேசிய ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் மாவட்ட ரீதியில் பொறியியல் தொழிநுட்பத்துறையில்எம்.ஜே. அத்ஹம் முதலாம் இடம் பெற்றதுடன், கலைத் துறையில் எம்.எல்.எம். ஆதில் மட்டக்களப்பு…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் வாழ்த்து செய்தி.

மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் பரீட்சைப்பெறுபேறுகள் – வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரமாக இப்பரீட்சைப்பெறுபேறுகள் அமைந்துள்ளதாக நேற்றைய தினம் (31) வெளியிடப்பட்ட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் குறிப்பிட்டுள்ளார். இப்பெறுபேறுகள் வெறும் மதிப்பெண்களல்ல. அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட உழைப்பு, தியாகம் மற்றும்…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான வாழ்த்து செய்தி.

அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையால் கிடைத்த வெற்றி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப்பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.பாஹிர் தெரிவித்துள்ளார். உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையின் பலனாக இவ்வெற்றியை அடைந்துள்ளீர்கள். அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல், குறிப்பாக, பெற்றோர்களின் அளப்பெறிய தியாகம் உங்கள் வெற்றிக்கு உரமாகும். நீங்கள் காட்டிய முயற்சி மற்றவர்களுக்கு ஒரு…

Read More

தேசிய ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் .

இன்றைய தினம்  வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை (2025) முடிவுகளின் படி காத்தான்குடியை சேர்ந்த மாணவர் முகம்மட் சுபைத்தீன் பர்தான் அவர்கள் வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவன் காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்றே இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

Read More

2025ம் ஆண்டுக்கான A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு .

2025 A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியானது 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செவ்வாய்கிழமை (31) வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஏறாவூர் பசீர் சேகுதாவூத் பாடசாலைக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு அலுவலக பொருட்கள் வழங்கி வைப்பு. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி அலுவலக பாவனை பொருட்களும் வகுப்பறைக்கான வெண்பலகையும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான SL.முனாப்தீனால் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை அதிபர் SAC.அஜ்மல்கானிடம் கையளிக்கப்பட்டது. பொருட்கள் கையளிப்பு நிகழ்வில் ஒய்வுநிலை ஆசிரியர் ALM.றபீக் மற்றும் ஆசிரியர் N.நசீர் அஹமட் உட்பட மாணவர்கள் என பலர் மேற்படி நிகழ்வில்…

Read More

ஜாஹிர் ஜே.பி.வெற்றிக்கிண்ணம் மாளிகா பிங்க் அணி வசமானது.

ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண இறுதியாட்டம் : மாளிகா பிங்க் அணி சம்பியன் (நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினரும், பிரதேச சமூக சேவகருமான ஏ.எம். ஜாஹீரின் பெயரில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதியாட்டத்தில் மாளிகா பிங்க் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியது. மாளிகா விளையாட்டுக்கழகத்தின் நான்காவது ஆண்டை முன்னிட்டு கழகத் தலைவர் எஸ். பஸ்லூன் தலைமையில் சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய…

Read More

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதியுதவி .

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் மாற்றித்திறனாளி மாணவர்களில்ளுக்கு நிதியுதவி. சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினூடாக மாற்றுத்திறனாளிகளுக்கான செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளியான பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் நோக்கில் கல்விக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று 30.03.2026ம் திகதி திங்கட்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறுக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் சிறாஜி,…

Read More

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் மறைவிற்கு ரவூப் ஹக்கீம் எம்.பி.இரங்கல் செய்தி.

மருத்துவப்பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேசளவில் புகழ் பூத்த உண்மையான முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப்பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற…

Read More
Back To Top