மட்டு.அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (25) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட செயலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்று செல்வதனை முன்னிட்டு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கிளை ரீதியான உத்தியோகத்தர்கள், சிவில் சமுக அமைப்புக்களின் ஒண்றிய பிரதிநிதிகள் போன்றோரால்…

Read More

ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்திற்கு முதலாவது தடவையாக பெண் அதிபர் நியமனம்.

ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்திற்கு முதலாவது பெண் அதிபர். (உமர் அறபாத் -ஏறாவூர்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி.ஜெஸீலா முகம்மது ஹாரிஸ் இன்று புதன்கிழமை(24/09)உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண் அதிபராகவும் திகழ்கின்றார். ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக இரண்டு வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையிலே இவ் அதிபர் நியமனம்…

Read More

16 பேரின் மரணத்திற்கு காரணமான எல்ல விபத்து பற்றிய அறிக்கை வெளியாகியது…!!

September 23, 2025 எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (22) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் வைத்து அதனுடன் தொடர்புடைய அமைச்சரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த வீதியில் நிறுவப்பட்ட வீதி சமிக்ஞைகள் மற்றும் பிற எச்சரிக்கை பலகைகள், வீதியின் ஆபத்தான தன்மையைப் பற்றி ஒரு அறிமுகமில்லாத வாகன சாரதிக்கு தெரியப்படுத்த…

Read More

காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து .

அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதுண்டு பயணிகள் பஸ் விபத்து கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு வழியே பயணித்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப்பயணித்த பேரூந்தானது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பேரூந்தின் பின்னால் பயணித்த முச்சகர வண்டியும் சிக்கியுள்ளது விபத்தின் போது முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு பேரூந்தின் முன் பகுதி என்பன பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதன்…

Read More

கொழும்பு மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். பொதுமக்கள் மத்தியில் இந்நாட்டின் புகையிரத சேவை தொடர்பில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பி, அதனை மிகவும் செயற்திறனான, வசதியான மற்றும் பிரபலமான போக்குவரத்து வழிமுறையாக மாற்றுவதற்கும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும். இதற்காக ஒன்றிணையும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…

Read More

வைத்திய நிபுணர் நிமலரஞ்சன் இன்று காலமானார் .

மட்டக்களப்பில் பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன் காலமானார். மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் . திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல…

Read More

கொழும்பு மத்திய பேரூந்து நிலையம் இடமாற்றம்.

இலங்கை போக்குவரத்து சபை கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தற்போது போதிராஜ மாவத்தை வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read More

மட்டக்களப்பில்  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்பட்டன. நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலை மாணவர் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுபாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்…

Read More

குருக்கள் மட மனித புதைகுழியினை பார்வையிட்டார் நீதிபதி .

குருக்கள் மட மனித புதை குழி இடத்தை பார்வையிட்ட நீதிபதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (11) வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி, புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு காத்தான்குடி திரும்பிய ஹாஜிகள் மற்றும் வியாபாரிகள், கல்முனை மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் பகுதியில் கடத்திக் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கே…

Read More
Back To Top