T20 வெற்றிக்கிண்ணம் இந்தியா வசமானது.

T20 உலக கிண்ணத்தை மூன்றாவது தடவையாகவும் கைப்பற்றியது இந்தியா.

நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா 03ஆவது முறையாகவும் T20 உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது..

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட நியூசிலாந்து அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 19 ஓவர்களில் 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top