ஏறாவூரில் சமூக உற்பத்தி திறனுக்கான மாதிரி கிராமம் அங்குராப்பணம்.

சமூக உற்பத்தி திறனுக்கான மாதிரி கிராமம் அங்குரார்ப்பன நிகழ்வு.

ஏறாவூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட றகுமத் நகர் கிராமத்தை ஒரு மாதிரி உற்பத்தி கிராமமாக மேம்படுத்தும் நோக்கோடு 03 பிரதான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (16.03.2026) ஏறாவூர் பிரதேச செயலாளர் SH. முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

“தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வீட்டு உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூக நிலையை உயர்த்தி, ஒழுக்கம் மற்றும் கலாச்சார விழுமியங்களுடன் கூடிய ஒரு வளமான வாழ்க்கையை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்துவதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள
முன்மாதிரி உற்பத்தி கிராமத்தை அடையாளப்படுத்தும் விதமாக பெயர் பலகை ஒன்றும்  இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS.நழீம், Clean Srilanka ஏறாவூர் இணைப்பாளர் ரகீஷ் சாஜித், ஏறாவூர் நகர சபை NPP உறுப்பினர் புஹாரி, ஏறாவூர் – 03 பிரஜா சக்தி தலைவர் ராபி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் MA. ஹன்சுல் சிஹானா, ஏறாவூர் – 03 பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  என பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.

இந்த மாதிரி கிராம செயற்திட்டத்தின் கீழ்

01) தையல்துறையை மையப்படுத்தி பொருளாதார ரீதியாக பெண்களை வழுவூட்டல்.

02) வீடுகளில் மீதப்படும் கழிவுகளை முகாமை செய்து எரிவாயு உற்பத்தி செய்தல்.

03) கிராமத்தில் உள்ள பிள்ளைகளினதும் சிறுவர்களினதும் போசனையை அதிகரித்தல்

ஆகிய திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top