20 வருடங்களுக்கு மேலாக செப்பனிப்படாத பொத்துவில் ஜெய்க்கா சுனாமி கிராம வீதிக்கு துரித அபிவிருத்தி.

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக செப்பனிடப்படாத வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் நிதியொதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தின் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமலிருந்த 1,200 மீட்டர் நீளமான ஜெய்க்கா சுனாமி கிராம வீதி காபட் வீதியாக செப்பனிடும் அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம் தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் சனிக்கிழமை (14) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலக செயலாளர் ஏ.சீ.எம். நஸீல், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று-பொத்துவில் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் அப்துல் பாரி, தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர்களான  மஹ்ரூப்,  புனீதன், பொத்துவில் பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top