ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் அலைகளின் ராகங்கள் நூல் வெளியீடு.

ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் ஏ.எல்.எம்.றமீஸ் எழுதிய  “அலைகளின் ராகங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா செவ்வாய்கிழமை(28) அன்று  ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலய கேட்போர் கூடத்தில்  சிறப்பாக இடம்பெற்றது.

ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.ஸப்றி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் 

அலிஸாஹிர் மெளலானா  கலந்துகொண்டு கவிதை நூலின் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.

 கெளரவ அதிதிகளாக  ஏறாவூர் நகரசபையின் முன்னாள்  தவிசாளர் MIM.தஸ்லீம்  நகரசபை உறுப்பினர்களான HM.அன்வர், AL.உவைஸ் அல்ஹபிழ் , கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் உட்பட  பல இலக்கிய ஆளுமைளும்  பாடசாலைகளின் அதிபர்களும் ஊரின் முக்கியஸ்தர்களும் பலரும்  கலந்து சிறப்பித்தனர்.

கவிஞர் ஏ.எல்.எம்.றமீஸ் எழுதி வெளியீடு செய்த  “அலைகளின் ராகங்கள்” கவிதை நூலானது கவிஞரின் முதலாவது கவிதை தொகுப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top