மூதூர் பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா, நேற்று சனிக்கிழமை (28) காலை சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.


மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.டி.எம். தாஹிஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களால் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பூங்கா வளாகம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்த சிரமதானத்தில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் எப். பாஹிம், தோப்பூர் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி அஸ்ரா, வருமானவரி உத்தியோகத்தர் திக்ருல்லா ஆசிக், சுகாதார மேற்பார்வையாளர் நஹீம், இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இடங்களை தூய்மையாகப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
