ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஊடாக பேரீத்தம்பழங்கள் வழங்கி வைப்பு.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி யினால் பேரீச்சம் பழம் வழங்கிவைப்பு..!

புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில், இலங்கையில் உள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் கடந்த (27)ம் திகதி அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு, காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top