வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு நேற்று 06.03.2026 அதன் தலைவர் உப்பாலி ரட்நாயக்க தலைமையில் ஆலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

நீண்ட வரலாற்றினைக்கொண்ட குறித்த கடதாசி உற்பத்தி நிலையமானது கடந்தகால அரசாங்க காலகட்டத்தில் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இயங்கு நிலையற்று காணப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டினை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் வழிகாட்டலில் மீண்டும் தலைவர் உப்பாலி ரட்நாயக்கவின் நிருவாகத்தின் கீழ் உற்பத்தியினை ஆரம்பித்து முன்னோக்கிய நிலையில் தொழிற்பாட்டில் இயங்கி வருகின்றது.

அந்த வகையில், இப்புனித ரமழான் மாதத்தில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வானது இடம்பெற்றதும், அதில் ஆலையில் தொழில் புரிபவர்கள் உட்பட பிரதேசத்திலுள்ள மூவின மக்களும் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும்.

மேலும், மார்க்கச்சொற்பொழிவினை அஷ்ஷெய்க் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வியினால் நடாத்தியதுடன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், உலமாகக்கள், புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top