காத்தான்குடியில் ரட்டம எகட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரம்.

காத்தான்குடியில் ரட்டம எகட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

“ரட்டம எகட்ட” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒன்றிணைந்து காத்தான்குடி பகுதியில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று   வெள்ளிக்கிழமை(06)அன்று முன்னெடுக்கப்பட்டது.

​விஷ போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு அளித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​​இதன்போது​போதைப் பொருளின் அபாயம் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பொது இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

​இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாளக அலககோன், பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top