ஓட்டமாவடியில் முச்சக்கர வண்டிச்சாரதிக்கு கெளரவிப்பும் பாராட்டும்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச்சாரதி முஸ்தபா இக்பால் (28) ம் திகதி ஓட்டமாவடி மேம்பாலத்தடியில் கண்டெடுத்த 14 இலட்சம் ரூபா பெருமதியான தங்க நகையையும் 19,420/- ரூபா ரொக்கப்பணத்தையும் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்து, உரியவரிடம் கையளித்திருந்தார்.
இவரது நேர்மையையும் நற்பண்பையும் பாராட்டி
நேற்று (29)இரவு 7.30 மணியளவில் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்திக்கருகில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசீக் தலைமையில் பொன்னாடை போர்த்தி பாராட்டி விருது வழங்கிக்கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பொதுமக்கள், நலன்விரும்பிகள், முச்சக்கர வண்டிச்சாரதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
