விமானப்படையினால் புதிய கணணி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் பாடசாலைக்கு கையளிப்பு.

விமானப்படையினால் புதிய கணனி, தகவல் தொழிநுட்ப மையம் கையளிப்பு

விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் கையளிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழிநுட்பப்பிரிவினால் நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம்  28 மார்ச் 2026ம் திகதி அன்று  பாடசாலைக்காக கையளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஒரு நவீன தொழிநுட்பக்கற்றல் சூழலை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. குளிரூட்டப்பட்ட இப்புதிய தகவல் தொழிநுட்ப ஆய்வகத்தில் 15 மேசைக்கணினிகள், UPS அமைப்புகளுடன் இணைய வசதிகள் அடங்கலாக அமைக்கப்பட்டுள்ளன.

இது பாடசாலை மாணவர்கள் நவீன தகவல் தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கற்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது .

இத்திட்டத்திற்கு (Alengko Foundation) அலெங்கோ அறக்கட்டளை மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனியிலுள்ள இலங்கைப்பிரஜைகள் நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.

மேலும், இதன் கட்டுமானப்பணிகள் இலங்கை விமானப்படையின் பிதுருத்தலகல நிலையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

கணினி வளாகத்தின் திறப்பு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசிதா ஹெட்டி ஆராச்சி, தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் குரூப் கேப்டன் சனக சூரியராச்சி, பிதுருத்தலகல விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் சிந்தக ஜயசுந்தர, விமானப்படை அதிகாரிகள், அலெங்கோ அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பாடசாலை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top