ஏறாவூர் பசீர் சேகுதாவூத் பாடசாலைக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு அலுவலக பொருட்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி அலுவலக பாவனை பொருட்களும் வகுப்பறைக்கான வெண்பலகையும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான SL.முனாப்தீனால் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை அதிபர் SAC.அஜ்மல்கானிடம் கையளிக்கப்பட்டது.

பொருட்கள் கையளிப்பு நிகழ்வில் ஒய்வுநிலை ஆசிரியர் ALM.றபீக் மற்றும் ஆசிரியர் N.நசீர் அஹமட் உட்பட மாணவர்கள் என பலர் மேற்படி நிகழ்வில் பங்கேற்று இருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top