மட்டு செங்கலடி பகுதியில்  யானைகளின்  அட்டகாசத்தால் பொருட்கள் சேதம்.

செங்கலடி பதுளை வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் வர்த்தக நிலையம் உட்பட பயிர் நிலங்களும் மதில்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.இச்சம்பவத்தினால் அதிகளவான பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன.

யானை அச்சுறுத்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் வேளை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவாக தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் இதன்போது கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top