உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

சாதனை படைத்த ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய மாணவர்களுக்கு ஜெயந்தியாய அஹமட் ஹிராஸில் கௌரவிப்பு

கடந்த 2025 க.பொ.த உயர்தரப்பரிட்சையில் சித்தியடைந்து வரலாற்றுச்சாதனை நிகழ்த்திய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் வழிகாட்டிய அதிபரையும் பாராட்டி வரவேற்று கௌரவிப்பு செய்த நிகழ்வானது ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் அதன் முதல்வர் எஸ்.ஐ.முஹாஜிரீன் அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் இன்று (06) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ICST CAMPUS முகாமையாளரும் வாகரைப்பிரதேச சபை உறுப்பினருமான SM தாஹிர், வாகரை பிரதேச சபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய JM முனாஸ் ஆகியோரும் ஜெயந்தியாய விவசாய சங்க தலைவர் JM முஸ்தகீர், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது திறமை சித்திகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்தவுடன், கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் MBM.ஜெமீல் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

அதிகஷ்ட பாடசாலையான இவ்விரண்டு பாடசாலைகளும் வேறு பாடசாலையாக இருந்தாலும் தங்களது பாடசாலையைப்போன்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவித்தது ஒரு புதிய கலாசாரத்தை நோக்கி நகர்வதற்கான அடித்தளமாக இவ்விழா அமைந்திருப்பதாக அதிபர் எஸ் ஐ முஹாஜிரீன் தனது தலைமையுரையில் தெரிவித்தார் .

இந்நிகழ்வுக்கு பூரண அனுசரணையாக இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் வழங்கியதோடு பிரதி அதிபர் வை.எல்.எம்.றிஸ்வி அவர்கள் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top