டித்வா புயலினால் சேதமடைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டு திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்டு, டித்வா சூறாவளியினால் சேதமடைந்த, அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார் .

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘டித்வா’ அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பணிகளை விரைவுபடுத்தி, அனைத்து இலங்கை மக்களுக்கும் மகிழ்ச்சியான தருணமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை அந்தக் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார் .

மேலும், பல்வேறு சவால்களுக்குப் பிறகு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாது மீண்டும் கட்டியெழுப்பப்படும் இலங்கை மக்களுடன் இணைந்து, ஒரே சுபநேரத்தில் ஒன்றிணையக் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும் இந்நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேலும் கூறினார்.

செய்தி மூலம்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top