கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்.

(பாறுக் ஷிஹான்)

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026ம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது, கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு சமூகப்பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இராப்போசன ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top