மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுகிறது .

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று திங்கள்கிழமை நிலவிய சீரற்ற காலநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதை காண முடிகின்றது.

இன்று பிற்பகல் வேளை வீசிய வேகமான காற்றுடன் அதிக மழையும் பெய்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு நிலவிய அதிக வெப்பநிலையினால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்கியதாகவும் இன்று பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top