
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஐந்து முச்சக்கர வண்டிகள் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.05.2026) வெள்ளிக்கிழமை காலை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எஸ். கரன் அவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மாவட்ட சமூக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தர் திரு சிவலிங்கம் (DSSO), பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஏ. இல்யாஸ், எம்.எல்.எம். மன்சூர், டி. யாழினி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
