

ராகமையில் அமைந்துள்ள “ரணவிரு செவன” பராமரிப்பு நிலையத்திற்கு இன்று (19) முற்பகல் விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படையினரின் நலன்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பாதுகாப்பு படையினர் அனைவரும் செய்த அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் வைத்தியர்கள் உட்பட ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படையினர்களுக்காக மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் சேவை வசதிகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
