ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணி தொடர்கிறது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் வழிகாட்டலில் ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் காணப்படுகின்ற வடிகான்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தொடர்ச்சியாக பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தவிசாளரின் ஆலோசனை மற்றும் உயரிய வழிகாட்டல் மூலம் மிச்நகர் பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் தொடராக முன்னெடுக்கப்படுவதினை முன்னிட்டு பொதுமக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இவ்வடிகான்களை துப்பரவு செய்வதன் மூலம் உயிர்க்கொல்லி நோயான டெங்கில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடிவதோடு மழை காலங்களில் வெள்ளநீர் இலகுவாக வடிந்தோடுவதற்கு வழிவகுக்கும்.

வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட வடிகான் துப்பரவு பணிகள் இன்று திங்கள்கிழமை(24) ஆலையடி வீதியில் தொடரப்பட்டதுடன் இதில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் உட்பட உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வடிகான்களில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உழவு இயந்திரம் மற்றும் திண்மக்கழிவு ஊழியர்களால் உரிய முறையில் அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top