பாசிகுடாவில் கோலாகலமாக அரங்கேறிய பிரம்மாண்ட கடற்கரை விழா.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏற்பாட்டில், “Pasikuda 2026 – Where The Sea Celebrates” எனும் பிரம்மாண்ட கடற்கரை விழா (29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை) மாலை பாசிகுடா பொதுக் கடற்கரையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.
​
இதன்போது இலங்கையின் தொன்மை மற்றும் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தும் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்
​கடலோரப் பகுதியின் பாரம்பரிய மற்றும் சுவையான உள்ளூர் உணவு வகைகளைச் சுவைப்பதற்கான சிறப்பு விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
​
மேலும் சுற்றுலா துறையின் ஊக்கப்படுத்தலுக்காக இங்கு வருகை தரும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையின் துள்ளலான நேரலை இசை விருந்தும் ​பிரம்மாண்ட வாணவேடிக்கை (Fireworks) காட்சிகளும் பார்ப்போரை கவரும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top