உலக அழகியாக தாய்லாந்து நாட்டுப் பெண் தெரிவானார்.
தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார்.
தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார்.
ஏறாவூர் ஜயங்கேணி மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கு 5 இலட்சம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் இன்று கையளிக்கப்பட்டது. செய்தியாளர் உமர் அறபாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூர் ஐயங்கேணி மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாயலுக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் கொள்வனவு செய்யப்பட்டன. கொள்வனவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு…
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்குள் இன்று (30) பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் துரத்தி துரத்தி குத்தியதில் 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகள் ஏற்பாடாகிய நிலையில் திடீரென தேன்பூச்சிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை குத்தியுள்ளது.
ஓட்டமாவடியில் பலத்த காற்று கணவன், மனைவி காயங்களுடன் வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மூத்தவன் போடியார் வீதியில் வீட்டின் கூரை காற்றினால் அடித்துச்செல்லப்பட்டு முன்னாலுள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி இருவர் காயமடைந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான 66 வயதுடைய சீனி முஹம்மது செய்லத்தும்மா என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா…
ஆங்காங்கே நடைபெறும் குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்! தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு, குற்றங்களில் இருந்து தப்பிச் செல்லும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான பதில் மிகவும் அவசியமான நிலையில், அவர்களை விரைவாக கண்டறிந்து கைது…
திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம்.( 2nd Batch) திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியானது மேல் மாகாணம் கம்பஹா மாவட்டில் அமையப் பெற்றுள்ள பிரபல பாடசாலைகளிள் ஒன்றாகும்.இப்பாடசாலை சுமார் 123 வருட வரலாற்றை கொண்ட பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பல மாணவர்கள் சாதாரண தரத்தில் நல்ல பெறுப்பேற்றை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினாலும், பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு…
அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக, திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள், உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில்“Small Entrepreneur Idea Workshop” கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியான்மை பிரிவின் ஏற்பாட்டில் “Small Entrepreneur Idea Workshop” ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று 27.05.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு இடம்பெற்றது. நிலையப்பொறுப்பாதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேற்பார்வை உத்தியோகத்தரும் வியாபார பயிற்றுவிப்பாளருமாகிய டி.நிலோசன் கலந்து கொண்டு தொழில் முயற்சி மற்றும் முயற்சியான்மை பற்றி விரிவுரையாற்றினார். இதில்…
களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக, களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெலேனா கல்லூரி…
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு! இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் வரலாற்று இடம்பெயர்வு குறித்தும் செந்தில் தொண்டமான் விளக்கம் அளித்தார்.