ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை .
ஏறாவூர் அல் மர்கஸுல் இஸ்லாமி ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது . பெருநாள் தொழுகை பேருரையை ARM.றிஸ்வான்(ஷர்கி) நிகழ்த்தினார்.
ஏறாவூர் அல் மர்கஸுல் இஸ்லாமி ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது . பெருநாள் தொழுகை பேருரையை ARM.றிஸ்வான்(ஷர்கி) நிகழ்த்தினார்.
கல்முனை நகரில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும். (நூருல் ஹுதா உமர்) சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் இன்று…
உடவெவல யக்காவெல பகுதியில் பயணித்த CTB பஸ் மீது பாரிய மரம் ஒன்று விழுவதை கண்டு பஸ் வண்டியின் சாரதி பயணிகளை காப்பாற்றுவதற்காக பஸ்ஸை பாதுகாப்பான இடத்திற்கு திருப்பியுள்ளார்.இச்சம்பவத்தில் பாரிய மரம் பஸ்ஸின் மீது விழுவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மரத்தின் சிலபகுதிகள் பஸ் சாரதியின் பக்கத்தை தாக்கியதால் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பாரிய உயிர்ச் சேத விபத்து ஒன்றிலிருந்து பயணிகளை காப்பாற்றி சிறுகாயமடைந்த பஸ் சாரதியை பாராட்டியுள்ளனர்.
மட்டு.போதனா வைத்தியசாலையின் நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமனம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மற்றொரு நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 01-06-2025ம் திகதியிலிருந்து நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த இவர், நேற்றைய தினம் (04-06-2025) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி முன்னிலையில் போதனா வைத்தியசாலைக்கான மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் “H -800க்கு அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை” (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமையவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதனின் தலைமையிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டன. இச்செயற்பாடுகளில் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகள் பார்வையிடப்பட்டன. கடைகளில் சுகாதார நிலைமைகள், உணவுப்பொருட்களின் பாதுகாப்பு பரிசீலனை…
🔸மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அவர்களின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சகிதம் இன்று (04) நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது.கடையை திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள். முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கி சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.அடுத்த வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரர் கடையை விட்டு வெளியே வந்து கடைத்தெருவில் எந்த கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்த கடையை காட்டி உங்களுக்கு தேவையான பொருள் அந்த கடையில் கிடைக்கும் என்று கூறி அனுப்பிவிடுவார்கள். சக வணிகர் இன்னும் அவரது வியாபாரத்தை துவக்க…
கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் திறந்து வைப்பு பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம். கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டார். கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா…
காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு. (எம்.பஹத் ஜுனைட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், சுயேட்சை குழு உறுப்பினர் ஆகியோருக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற…