5வது ஆண்டு நினைவு தினம் .

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Read More

ஸ்கை தமிழ் ஊடகத்தின் இரண்டாவது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றது .

காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இரண்டாவது புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு.. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு “இதயம்” செயற்திட்டத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான “மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை- வாய்ப்புற்று நோய் தொடர்பான இரண்டாவது இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (25) காத்தான்குடிஇஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டலில் இதயம் செயற்றிட்ட தலைவர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் ஸ்கை தமிழ் செய்தி உதவி முகாமையாளர் சிம்ரா நெறிப்படுத்தலில்…

Read More

விபத்தில் இருவர் மரணம். திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சற்று முன் பனிச்சங்கேணி பாலத்தில் விபத்து. ஓட்டமாவடி பதுறியா நகரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்.ஜனாஷா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

எமது நாட்டின் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Connect – 2025 எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர் கழகங்கள் புனரமைக்கப்படவுள்ளன. அந்த வகையில்  காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் காத்தான்குடி Social Welfare இளைஞர் கழகத்தின் புனரமைப்புக் கூட்டம் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW.இர்சாத் அலி அவர்கள் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர்…

Read More

புலமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் Sparkling Scholars – 2024 விழா நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் Sparkling Scholars – 2024 விழா அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

Read More

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களது நடைபவணி.

ஓட்டமாவடி தேசிய படசாலை பழைய மாணவர்களது நடைபவனி. ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 109 வருட நிறைவை முன்னிட்டும் பழைய மாணவர் அமைப்புக்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்று போட்டி சீசன் திரி (03) ஆகியவற்றை முன்னிட்டும் இன்று சனிக்கிழமை (24.05.2025) பழைய மாணவர்களால் நடைபவனி இடம் பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக ஓய்வு பெற்ற கோட்ட கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பழைய…

Read More

சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு.

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. இந்த நாடாப்புழு 70 சென்றி மீற்றர் நீளத்தை விடவும் அதிகமாகும். இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரங்க தொலமுல்லா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை நிபுணர் ரோஹித முத்துகல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை…

Read More

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இணைப்பு 2025 எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் கழகங்களை அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுளில் ஓர் அங்கமாக பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 23/05/2025 இன்று ஏறாவூர் சாதுலி பள்ளிவாயல் வளாகத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி தலைமையில் இடம்பெற்றது .பிரதம அதிதிதியாக பிரதேச செயலாளர் SH.முஸம்மில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார் .மேற்படி நிகழ்வில் பிரதேச…

Read More

கடற்கொள்ளையர்களின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த மட்டக்களப்பு ,அம்பாரை பாராளுமன்ற உறுப்பினர்கள் .

கடற்கொள்ளையர்களின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த மட்டு, அம்பாரை எம்பிக்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவருமான ஏ.ஆதம்பாவா, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு ஆகியோர் நேற்று (21/05/2025) கடற்றொழில்…

Read More

வாழைச்சேனை கிரான் மந்தரியாறு பகுதியில் முதலை இழுத்து சென்ற நபர் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று 22/05 இடுப்பு மேற் பகுதியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கடந்த 20/5 மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரான வி.கிருஸ்ணதீபன் (அசோக்) என தெரிய வந்துள்ளது.முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை கடந்த…

Read More
Back To Top