இலவச மூக்குக்கண்ணாடி வழங்கி வைப்பு.

வறிய மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு. (எம்.பஹத் ஜுனைட்) காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிருத்திக்குமான அமைப்பின் (YESDO) ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்காக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (02) காத்தான்குடி அல்-மனார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எம்.ரீ.எம். இர்பான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மொரட்டுவை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. என்.எம்.எம். நிஹாஜ், மற்றும் கொழும்பு தேசிய கண்…

Read More

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஏறாவூருக்கு விஜயம்.

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம். பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்விச்சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக நேற்று (2025.11.01) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். புதிய கல்விச்சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் நடமாடும் சேவையிலும் பங்கேற்றார். இந்நடமாடும் சேவையின் போது, கல்வி நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள்…

Read More

டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல் தொடர்பான ஊடக செயலமர்வு மட்டு.கல்லடியில் இடம்பெற்றது .

டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ தொடர்பில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு.. (எம்.பஹத் ஜுனைட்) ஊடக சட்ட மன்றம்(Medial Law Forum )ஏற்பாடு செய்த ‘ டிஜிடல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ எனும் தலைப்பிலான ஊடக பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை(01) மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. தேர்தல் காலங்களில் செய்தி அறிக்கையிடல்,போலி தகவல்களை இனங்காணல்,நிகழ்நிலைக்காப்புச் சட்டம்,ஊடக சட்டம், ஊடக பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்பில் விரிவுரைகள் இடம்பெற்றது. இச் செயலமர்வில் சட்டத்தரணி கலாநிதி…

Read More

கபே அமைப்பினால் ஜனனி வேலைத்திட்டம் .

“ஜனனி” வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதலாவது செயலமர்வானது, இன்று புத்தளம் மாவட்டத்தில் மதுரன்குலிய இசுரு ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இச் செயலமர்வில், பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவபப்டுத்திய பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், சிறப்பு விருந்தினராக தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்க அவர்களும், புத்தளம் மாவட்டத்தின் துணை தேர்தல் ஆணையாளர் திரு. லக்ஷித ஜயனத் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இச்செயலமர்வில் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கின்…

Read More

போதைப் பொருள் இல்லாத பிரகாசமான எதிர்காலம்.

போதைப்பொருள் இல்லாத பிரகாசமான எதிர்காலம் : ஜனாதிபதியின் திட்டம் காலோசிதமானது – மட்டு. எம்பி கந்தசாமி பிரபு போதைப்பொருள் ஒழிப்பிற்கு ‘முழு நாடுமே ஒன்றாக’ – ஜனாதிபதி தலைமையில் தேசிய செயற்றிட்டம் ஆரம்பம் நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையையும் அதன்மூலம் ஏற்படும் சமூகச் சீரழிவுகளையும் முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்றிட்டம் நேற்று (அக்டோபர் 30, 2025) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு…

Read More

ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் ரூபாய் இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை அபிவிருத்தித் திட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது .

Read More

போலிச் செய்தி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக அறிக்கை .

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!! ​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். ​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில்…

Read More

காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம்.

சவால்கள் நிறைந்த பூர்வீக கிராமம் – காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம். (எம்.பஹத் ஜுனைட்) மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராம மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை (26) கள விஜயம் மேற்கொண்டனர். போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் விஜயம் மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் தகவல்களை…

Read More

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ஏறாவூருக்கு விஜயம் .

ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு டில்வின் விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா நேற்று (25.10.2025) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (ESSCA) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். புற்றுநோயாளர்களுக்கு மிகவும் முக்கியமான வைத்தியசாலையாக சேவைகளை வழங்கி வரும் குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், எதிர்கால சமூக நலத்திட்டங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலிலும் டில்வின் சில்வா ஈடுடட்டார். இவ்விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்…

Read More

ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் .

அனர்த்த முகாமைத்துவ தொடர்பான கூட்டம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது . அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் 24-10-2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் நாட்களில் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏறாவூரில் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறான முன் ஆயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரதேசத்தில் அனர்த்தம்…

Read More
Back To Top