ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு.குறுகிய வினாடிகளில் வெடித்து சிதறியது.

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு… 6 வினாடிகளில் வெடித்துச் சிதறிய விண்கல்.


மார்ச் மாதம் 8ம் திகதி மாலை ஐரோப்பாவின் வான்பரப்பில் பிரகாசமான நெருப்புக் கோளம் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டு உறைந்து போயினர். வானில் ஒரு பிரம்மாண்ட நெருப்புப் பிழம்பு அதிவேகமாகப் பாய்ந்து சென்று, பின்னர் துண்டு துண்டாகச் சிதறியது. பெல்ஜியம் முதல் ஜெர்மனி வரை பல நாடுகளில் தென்பட்ட இந்த விண்கல், சுமார் 6 வினாடிகள் வான்பரப்பை ஒளிரச் செய்தது. சுமார் 2,800-க்கும் மேற்பட்டோர் தாங்கள் கண்ட காட்சியைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top